அதிமுகவுக்கு செக்; திமுகவுக்கு ஷாக்!. ராஜினாமா செய்த 2 பெண் வேட்பாளர்களை களமிறக்கிய தவெக!. முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!.

by election tvk candidates 30kb

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.


சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் இறங்கிஉள்ளன. திமுக சார்பில் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகிய இருவருக்கும் தவெக சார்பில் இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ளார். அதில், மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வெற்றிக்கு கட்சித் தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்று தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்த மரகதம் குமரவேல் துணை பொதுச்செயலாளராக உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சத்தியபாமா திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

புதின் வருகை; இவ்வளவு பாதுகாப்பா? 2 நாட்களுக்கு முன்பே இந்தியா வந்திறங்கிய 3 ரஷ்ய ராணுவ விமானங்கள்!.

Thu Sep 10 , 2026
டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகைக்காகவும் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ரஷ்யாவின் சக்திவாய்ந்த IL-76 […]
putin russian army flight 30kb

You May Like