புதின் ஒருபுறம், ஈரான் அதிபர் மறுபுறம்: கைகோர்த்து நடைபோட்ட மோடி!. குளோபல் சவுத் அரசியலில் கவனம் ஈர்த்த புகைப்படம்!

brics pm modi 30kb

டெல்லியில் நடைபெற்ற BRICS வர்த்தக மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் சிவப்புக் கம்பளப் பாதையில் கைகளை கோர்த்துக்கொண்டு இணைந்து நடந்து சென்றார்.


தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் BRICS உறுப்பு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் தற்போது இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவின் 2026 BRICS தலைமைப் பொறுப்பின் தரவுகளின்படி, இக்கூட்டமைப்பு நாடுகளிடம் உலகின் மொத்த மக்கள் தொகையில் 49.5 சதவீதமும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 26 சதவீதமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்வழி வர்த்தகத்தை ஈரானிய மோதல்கள் பாதித்துள்ள நிலையிலும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும், இந்தப் புகைப்படத்தின் நேரம் மிகுந்த புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் தனது கேந்திரியக் கூட்டாண்மையை இந்தியா தொடர்ந்தாலும், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் தனது தூதரக உறவுகளைத் தடையின்றிப் பேணி வருகிறது.

BRICS வர்த்தக மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நாடுகள் தங்கள் பொருளாதார பலத்தை வலுவான முதலீடுகளாக மாற்ற வேண்டும் என்றும், உலகளாவிய வர்த்தகத்திற்குப் பாதுகாப்பான கடல் வழிகளும் வழிசெலுத்தல் சுதந்திரமும் அவசியமென்றும் வலியுறுத்தினார்.

BRICS அமைப்பின் மிகப்பெரிய 10 வர்த்தகத் தடைகளைக் களைவது, ஆண்டுதோறும் 100 ஸ்டார்ட்-அப்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் 1,000 புதிய வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்குவது போன்ற முக்கிய இலக்குகளையும் அவர் முன்மொழிந்தார்.

உச்சிமாநாட்டின் இடையே பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதும் சந்தித்துப் பேசினர்; அப்போது இந்தியாவின் 2026 BRICS தலைமைத்துவம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு மற்றும் கருங்கடல் பிராந்திய மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

மோதல்களுக்குத் தீர்வு காண உரையாடலும் இராஜதந்திரமுமே ஒரே வழி என்றும், எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா எப்போதும் உதவத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1newsnationuser5

Next Post

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. 6.6 ரிக்டர் அளவில் குலுங்கிய ஜாவா தீவு!

Sat Sep 12 , 2026
இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜாவா தீவில் உள்ள தெலுக்நாகா நகருக்கு வடகிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் (71 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக USGS குறிப்பிட்டுள்ளது. ஜாவா தீவின் பல்வேறு பகுதிகளிலும் (சுராபயா, துபான், டென்பசார் மற்றும் செமராங் போன்ற முக்கிய நகரங்கள் உட்பட) இதன் அதிர்வுகள் லேசாக உணரப்பட்டன. இதற்கிடையில், […]
earthquake

You May Like