fbpx

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது…! தலைமைக்கு குஷ்பூ கடிதம்…

தமிழகத்தில் பாஜக கட்சியின் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் ஈர்ப்பாக இருந்த நடிகரும், அரசியல்வாதியுமான பாஜக தலைவர் குஷ்பூ சுந்தர், பிரச்சாரத்தில் இருந்து விலகியுள்ளார்.

பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட காயம் தான் இந்த முடிவுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கடிதத்தில், “நான் நன்றியுணர்வுடன் ஒரு அளவு சோகத்துடன் உங்களை அணுகுகிறேன். 2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து, எனக்கு வால் எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் உடல் ரிதியாக இன்னல்களுக்கு ஆளாகியுள்ளேன், தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை.

பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவக் குழு எனக்கு பல முறை அறிவுறுத்தினர். பிரச்சாரங்களை மேற்கொள்வதால் எனது நிலை மோசமாக்கும் என்றும் கூறினர். நரேந்திர மோடி அவர்கள் ஒரு போர் வீரன் என்ற முறையில் மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக, வலி மற்றும் வேதனை இருந்தபோதிலும், என்னால் முடிந்தவரை உழைத்து பிரச்சாரம் செய்தேன்.

மேலும் எதிர்பார்த்தபடியே உடல்நிலை மோசமடைந்தது. உடல் நிலையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது என குஷ்பூ பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டாவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.

Vignesh

Next Post

'தளபதி 69' படத்திற்காக 4 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை!! யார் யார் தெரியுமா?

Sun Apr 7 , 2024
விஜய் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் தளபதி 69 தயாராகவுள்ளது. இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது படக்குழு படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ள நிலையில் இம்மாதம் […]

You May Like