fbpx

‘தளபதி 69’ படத்திற்காக 4 நடிகைகளுடன் பேச்சுவார்த்தை!! யார் யார் தெரியுமா?

விஜய் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் தளபதி 69 தயாராகவுள்ளது. இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது

விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது படக்குழு படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ள நிலையில் இம்மாதம் இறுதிக்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு GOAT படத்தை வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கிய நடிகர் விஜய், ‘இனிமேல் திரைப்படங்கள் நடிக்கப் போவதில்லை, தளபதி 69 படமே இறுதிப்படமாக இருக்கும்’ என தெரிவித்திருந்தார். முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என விஜய் கூறியது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் என்று தகவல்கள் அதிகம் பரவின. ஆனால் இப்போதோ ஹெச்.வினோத் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் அரசியல் படமாக அது உருவாகும் என்றும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் படத்தில் விஜயின் ஜோடியாக நடிக்க நான்கு ஹீரோயின்களின் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. அதன்படி த்ரிஷா, மிருணாள் தாகூர், சமந்தா, அலியா பட் ஆகியோர்களில் ஒருவர் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

த்ரிஷா சமந்தா இருவரும் விஜயுடன் ஏற்கனவே படங்களில் நடித்துள்ளனர். மிருணாள் தாகூர், அலியாபட் இருவரும் இன்னும் எண்ட்ரி கொடுக்கவில்லை. ஒருவேளை இருவரில் ஒருவர் நடிப்பது உறுதியானால் அவர்கள் கோலிவுட் எண்ட்ரியும் இப்படத்தின் வாயிலாக நிகழும். தளபதி 69 படத்தில் விஜயின் ஜோடி யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Next Post

Election 2024 | "தமிழகத்தில் பாஜக வெற்றி உறுதி"… அரியலூர் பொதுக்கூட்டத்தில் முழங்கிய ஜே.பி நட்டா.!!

Sun Apr 7 , 2024
Election 2024: நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும் என அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் […]

You May Like