பூஞ்சை காளான்கள் பாழடைந்த டிரம்ப்பின் சொந்த ஊர் வீடு!. ரூ. 16 கோடிக்கு விலைபோன சுவாரஸ்யப் பின்னணி!

trump home 30kb

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நான்கு வயது வரை வாழ்ந்த க்யூவீன்ஸ் (Queens) பகுதியில் உள்ள குழந்தைப் பருவ வீடு, பெரும் மாற்றங்களுக்குப் பிறகு சுமார் 1.93 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய்) புதிய உரிமையாளரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ட்ரம்பின் தந்தையும் டெவலப்பருமான ஃப்ரெட் ட்ரம்ப் என்பவரால் ஜமைக்கா எஸ்டேட்ஸ் பகுதியில் கடந்த 1940 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ‘டியூடோர்’ பாணி குடியிருப்பு வீடு, நீண்ட காலமாக யாருமின்றி பூட்டிக்கிடந்து பரிதாப நிலையில் இருந்தது.


வெள்ளிக்கிழமையன்று வெளியான ரியல் எஸ்டேட் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இருப்பினும், வீட்டை வாங்கிய புதிய வாடிக்கையாளரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த வீட்டை விலைக்கு வாங்கிய டெவலப்பர் டாமி லின் (Tommy Lin), பூஞ்சைக் காளான்களாலும் பூனைத் தொல்லைகளாலும் சிதைந்து போயிருந்த வீட்டை சுமார் 8 மாத உழைப்பில் முழுமையாக நவீனமயமாக்கியுள்ளார். நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, சமையலறை சீரமைப்பு, மரத்தாலான தரை மற்றும் ஸ்பா போன்ற குளியலறைகள் என இந்த நவீனப் பணிகளுக்காக அவர் சுமார் 5 லட்சம் டாலர்களைச் செலவிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ட்ரம்ப் முதன்முதலில் அதிபராக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, இந்த வீடு 2.14 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஏர்பிஎன்பி (Airbnb) மூலம் வாடகைக்கு விடப்பட்ட இந்த வீட்டை, கடந்த 2019 ஆம் ஆண்டு 2.9 மில்லியன் டாலர் விலைக்கு விற்க முயன்றும் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் பராமரிப்பின்றி வீட்டின் குழாய்கள் வெடித்து, தண்ணீர் கசிவு ஏற்பட்டு, பூஞ்சைக் காளான்கள் பரவி, பூனைகளின் வப்பிடமாக மாறி மிகவும் மோசமான நிலையை எட்டியது.

தற்போது 80 வயதாகும் டொனால்ட் ட்ரம்ப், தனது ஆரம்பகால சொத்துக்களை ரியல் எஸ்டேட் துறையின் மூலமாகவே கட்டமைத்தவர். மன்ஹாட்டனில் உள்ள ‘ட்ரம்ப டவர்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட கட்டிடங்களை உருவாக்கிய அவர், அரசியலில் களமிறங்குவதற்கு முன்பு அங்கேதான் பல ஆண்டுகளாக வசித்து வந்தார்.

தற்போது அமெரிக்க அதிபராகப் பணியாற்றி வரும் ட்ரம்ப், வெள்ளை மாளிகையிலும் தனது பாணி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிரம்மாண்டமான புதிய விருந்து அரங்கம் மற்றும் ஓவல் அலுவலகத்தில் தனது வழக்கமான தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரப் பொருட்களை அவர் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

பாரம்பரிய சிறுதானியங்கள் முதல்... உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த அசத்தலான சைவ விருந்து!. இத்தனை ஸ்பெஷல் ஐட்டங்களா?.

Sun Sep 13 , 2026
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இரவு விருந்தில், இந்தியாவின் பாரம்பரிய மணம் வீசும் சிறுதானியங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நாவில் கரையும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பாரம்பரிய இந்தியச் சுவைகளையும் நவீன உணவு வகைகளின் நேர்த்தியையும் இணைத்து வடிவமைக்கப்பட்ட இந்த மெனுவில், தொடக்க உணவாக ‘கண்ட்வி மில்-ஃபூய்’ (Khandvi Mille-Feuille) மற்றும் […]
BRICS Summit Dinner 30kb

You May Like