சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை..! மாநகராட்சி ஆணையாளர் முக்கிய ஆலோசனை..!

Heavy Rain 2026

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று (18.09.2026) ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் ஆலோசனை நடத்தி, பருவமழையை எதிர்கொள்ள தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


சென்னையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மாநகராட்சி பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில், மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். மழை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையின் போது மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்தால் அவற்றை விரைவாக அகற்றுவதற்காக தேவையான வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையான இடங்களில் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்கியதும் அதை உடனடியாக வெளியேற்றும் வகையில் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண மையங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் தேவையான நேரத்தில் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தி, மழைக்கால பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம், துணை ஆணையாளர் (வருவாய் மற்றும் நிதி) சித்ரா விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டார துணை ஆணையாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். பருவமழை காலத்தில் மழைநீர் தேக்கம், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Also Read :மக்களே.. குடையை மறந்துறாதீங்க..!! அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கும்..!! லிங்டில் எந்தெந்த மாவட்டங்கள்..!!

maha

Next Post

விரதம் இருக்கும்போது டீ, காபி பழக்கம் இருக்கா?.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Sat Sep 19 , 2026
பண்டிகை காலங்களில் விரதம் இருப்பது இந்தியாவின் பல்வேறு மத மற்றும் ஆன்மிக மரபுகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது. உடல் சுத்தம், மனக் கட்டுப்பாடு, தியானம், இறைநாமத்தை உச்சரித்தல் போன்றவற்றுக்காக பலர் விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் விரத நேரத்தில் பசியை சமாளிக்க தேநீர், காபி போன்ற பானங்களை அதிகமாக அருந்துவது உடல்நலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். விரதம் இருக்கும் நாட்களில் பலர் பால் தேநீர், பால் சேர்க்காத தேநீர், கிரீன் டீ […]
Tea Too Hot cancer 30kb

You May Like