சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! சீமானின் சூறாவளி பிரச்சாரம் இன்று முதல் ஆரம்பம்..!!

Seeman 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியும் இன்றி தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி, தனது முதற்கட்ட பிரச்சார பணிகளை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளது.


பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தனித் தொகுதியில், இம்முறை பாரம்பரியக் கட்சிகளின் கணக்குகளை உடைக்கும் வகையில், இளம் பெண் பட்டதாரியான பொறியாளர் மு.கார்த்திகாவை நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. கடந்த தேர்தல்களில் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி நின்ற இத்தொகுதியில், படித்துப் பட்டம் பெற்ற ஒரு பெண் பொறியாளரை நிறுத்தியிருப்பது அப்பகுதியிலுள்ள இளம் தலைமுறையினர் மற்றும் பெண் வாக்காளர்கள் மத்தியில் கவனிக்கத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரடியாகப் பங்கேற்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் இன்று (செப்டம்பர் 21) மாலை 7.00 மணியளவில் தாராபுரம் முருகன் கோவில் (காவல் நிலையம் அருகில்) நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் சின்னம் பெறுவதில் பல்வேறு நெருக்கடிகளையும் சட்டப் போராட்டங்களையும் சந்தித்த நாம் தமிழர் கட்சி, இம்முறை தங்களின் அடையாள சின்னமான ‘விவசாயி’ (கரும்பு விவசாயி) சின்னத்துடனேயே களமிறங்குகிறது.

Read More : ஒரே ஊரில் பெஞ்ச் தேய்க்கும் அரசு ஊழியர்களுக்கு செக்..! சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!

Next Post

சாதாரண அறிகுறி என நினைக்காதீங்க.. சிறுநீரகம் பாதிக்கப்படும்போது உடல் இப்படித்தான் சிக்னல் கொடுக்கும்!

Mon Sep 21 , 2026
நம் உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. ரத்தத்தில் சேரும் கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வடிகட்டி, அவற்றை சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுவது சிறுநீரகங்களின் முக்கிய பணியாகும். இதுதவிர, உடலில் நீர் மற்றும் திரவங்களின் சமநிலையை பராமரிப்பது, சோடியம் உள்ளிட்ட சில தாதுக்களின் அளவை சீராக வைத்திருப்பது போன்ற முக்கிய செயல்பாடுகளிலும் சிறுநீரகங்கள் ஈடுபடுகின்றன. சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டாலும், ஆரம்ப கட்டத்தில் உடனடியாக […]
kidney stone risk factors

You May Like