ஒரே ஊரில் பெஞ்ச் தேய்க்கும் அரசு ஊழியர்களுக்கு செக்..! சாட்டையை சுழற்றும் தவெக அரசு..!

Chennai Secretariat 2025

தமிழக அரசுத் துறைகளில் ஊழலை ஒழித்து, நிர்வாகச் சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் நோக்கில், ஒரே அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டுள்ள ஊழியர்களை கண்டறிந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலம் ஒரே நபர் பணியாற்றி வரும்போது, நிர்வாகத்தில் மந்தநிலை ஏற்படுவதோடு, பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் தேவையில்லாத நெருக்கம் ஏற்பட்டு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக அரசு கருதுகிறது. குறிப்பாகக் கணக்கு, நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த பிரிவுகளில் பல ஆண்டுகளாக ஒரே நபர்கள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை சார்பில் அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள ஊழியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளைத் தாண்டியோ அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாகவோ பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விவரங்களையும் துல்லியமாகச் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பதவி உயர்வு பெற்று வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட பிறகு, சில மாதங்களிலேயே அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தியோ அல்லது நிர்வாகக் காரணங்களைக் காட்டியோ மீண்டும் பழைய இடத்திற்கே ‘ரிட்டன்’ வந்த ஊழியர்கள் யார் யார், அவர்கள் எப்போது மீண்டும் பழைய இடத்திற்கு வந்தார்கள், அதற்கான பின்னணி என்ன என்பது குறித்த விபரங்களையும் அறிக்கையில் கட்டாயம் இணைக்க வேண்டும் என கறாராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை ‘அதிமுக்கியத்துவம் வாய்ந்தது’ என குறிப்பிட்டுள்ள அரசு, அனைத்துத் துறைகளும் ஊழியர்களின் முழுப் பட்டியலையும் தயாரித்து வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கெடு விதித்துள்ளது. தவெக அரசின் இந்தத் திடீர் களையெடுப்பு உத்தரவு, பல ஆண்டுகளாக ஒரே நாற்காலியில் அமர்ந்து கோலோச்சி வந்த பல ‘சீனியர்’ அரசு ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடையே பெரும் கலக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஓங்கி ஒரே அடி.. கம்மலோடு கிழிந்து தொங்கிய காது..! கறிக்கடை கத்தியை எடுத்து கொலை மிரட்டல்..! நடுரோட்டில் பெண்கள் அட்ராசிட்டி..!

Next Post

வாலிபரின் ஆசையை தூண்டிவிட்ட 3 இளம்பெண்கள்..!! கரும்பு விற்ற மொத்த பணமும் போச்சு..!! முகம் சிதைந்தது தான் மிச்சம்..!! கோயம்பேட்டில் பகீர்..!!

Sun Sep 20 , 2026
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்லக் காத்திருந்த தொழிலாளியிடம், உல்லாச ஆசை காட்டி வரவழைத்துத் தாக்கி, பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற 3 இளம்பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட ‘ஹனி டிராப்’ கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர், சென்னை தரமணியில் உள்ள விடுதியொன்றில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். விநாயகர் சதுர்த்தி […]
ambala honey trap case

You May Like