BREAKING | தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடையில்லை..!! சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்..!!

Seval 2026 1

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சேவல் சண்டை நடத்தத் தடை விதித்து தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாரம்பரியக் கோயில் திருவிழாக்களின்போது வழக்கம் போல சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரியும், ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிருகவதை தடுப்புச் சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆகியவை ஏற்கனவே பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில்தான் டிஜிபி இந்த சுற்றறிக்கையை வெளியிட்டார் என வாதிட்டார். மேலும், இது தொடர்பான பொதுநல மனு ஒன்று தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதால், விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

அரசுத் தரப்பின் இந்த வாதத்தை ஏற்க திட்டவட்டமாக மறுத்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், காவல்துறையின் எல்லை மீறிய நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “தமிழகத்தில் சேவல் சண்டையைத் தடை செய்து பொதுவான சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட எத்தனையோ சட்டம் – ஒழுங்குப் பணிகள் காவல்துறைக்கு உள்ளன. அதையெல்லாம் விடுத்து, ஆடு சண்டை எங்கே நடக்கிறது? சேவல் சண்டை எங்கே நடக்கிறது? என்று தேடித் தேடிக் கண்காணிப்பது மட்டும்தான் காவல்துறையின் தலையாய வேலையா?” என்று நீதிபதி அடுக்கடுக்கான அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பினார்.

மனுதாரரின் கோரிக்கை குறித்து காவல்துறை தரப்பில் விரிவான விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கவில்லை என்றும் அதை முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம் அளித்தார். டிஜிபியின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, சேவல் சண்டைக்கு தடை இல்லை என்பதால், காவல்துறையினரை அணுகி மனுதாரர் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Read More : தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்..!! அக்டோபர் 2ம் தேதி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் துவக்கம்..!! வெளியானது அறிவிப்பு..!!

Next Post

ஏழை சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி..! கைமாறிய ரூ.10 கோடி..! ஒருத்தரையும் விடக்கூடாது..! முதல்வர் விஜய் உத்தரவு..!

Mon Sep 21 , 2026
ஜெம் குழுமத்தின் தலைவர் ஆர். வீரமணி. வயது 84. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணி கைது செய்யப்பட்டார். வீரமணியிடம் சிறுமிகளை அழைத்துச் சென்ற சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்மனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை குறிவைத்து வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த […]
Gem Veeramani 2026

You May Like