மக்களே உஷார்!. இந்த மருந்துகளை அடிக்கடி எடுத்துகொள்கிறீர்களா?. கிட்னியை பாதிக்கும்!. மத்திய அரசு எச்சரிக்கை!

cancer tablet warning 11zon

மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும் என இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி (DCGI) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி கையெழுத்திட்டு செப்டம்பர் 21 அன்று வெளியிட்ட இந்தச் சுற்றறிக்கை, மருத்துவர்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதில், மருத்துவ ஆலோசனையின்றி NSAID எனப்படும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகளை அடிக்கடி, தொடர்ந்து அல்லது நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, இந்திய வீடுகளில் சாதாரண சளி மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு தாமாகவே ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது சிறுநீரக பாதிப்பு அபாயம் உள்ளவர்கள், வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு கட்டாயம் தங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். வலி அல்லது காய்ச்சல் குறையாமல் தொடர்ந்து இருந்தால் தாமாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

நோயாளியின் வயது, உடல்நிலை மற்றும் பிற நோய்களை கருத்தில் கொண்டு, மிகவும் அவசியமானால் மட்டுமே இந்த மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். குறிப்பாக, சிறுநீரக பாதிப்பு அபாயம் உள்ளவர்களுக்குக் குறைந்த அளவிலான டோஸை (Lowest effective dose), குறுகிய காலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். தேவையற்ற அதிக அளவிலான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலான வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகள் ‘Schedule H’ மற்றும் ‘Schedule H1’ விதிகளின் கீழ் வருவதால், பதிவுபெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் இவற்றை விற்கக் கூடாது. மருத்துவர் சீட்டு இல்லாமல் சுயமாக மருந்து வாங்குபவர்களை மருந்தாளுநர்கள் ஊக்குவிக்கக் கூடாது.

மத்திய அரசின் இந்த முடிவை மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் இதுகுறித்துக் கூறுகையில், “ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளவர்களுக்கும் கூட, இந்த மருந்துகளை சுயமாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே இந்த மருந்துகளை விற்க வேண்டும் என்ற இந்த முடிவு மிகச் சிறந்தது” என்றார்.

மருத்துவமனைகள் இந்த மருந்துகளின் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கான உள் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இது குறித்து மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தவிர்க்கக்கூடிய சிறுநீரக பாதிப்புகள், மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (Antimicrobial resistance) போன்ற பெரும் பொது சுகாதாரப் பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

1newsnationuser5

Next Post

ஆடும் லெவன் லீக்... ரூ. 3 கோடி மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை!. மீண்டும் சிஎஸ்கே-வில் வெடிக்கும் பூகம்பம்!.

Wed Sep 23 , 2026
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது வீரர் ஒருவர் அணியின் ஆடும் 11 வீரர்கள் பட்டியலை ஒரு பந்தயத் தரகருக்குக் கசியவிட்டதாக வந்த சமீபத்திய செய்திகள் குறித்து அணி நிர்வாகம் செப்டம்பர் 25 அன்று நடைபெற உள்ள அதன் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்க உள்ளது. ஊழலைச் சற்றும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் கூறியதாக கிரிக்பஸ் செய்தி […]
csk

You May Like