பாக்டீரியா தொற்றுகளைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய மருந்துகளாக ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் உள்ளன. ஆனால், தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், குடலில் செரிமானத்திற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் இந்த மருந்துகள் பாதிக்கக்கூடும். இதனால் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் இயல்பான சமநிலை மாறி, சிலருக்குச் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் காலத்திலும், சிகிச்சை முடிந்த பிறகும் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், அதிக வாயுத் தொல்லை, […]

மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும் என இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி (DCGI) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி கையெழுத்திட்டு செப்டம்பர் 21 அன்று வெளியிட்ட இந்தச் சுற்றறிக்கை, மருத்துவர்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் சில முக்கிய […]

1800-களின் இறுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும், மருத்துவ உலகம் ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வந்தது. அப்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்கள் கூட மனிதர்களை கொத்துக்கொத்தாக பலி வாங்கின. இந்த இக்கட்டான சூழலில் தான், 1944-ஆம் ஆண்டு ‘பென்சிலின்’ (Penicillin) என்ற மருந்து அறிமுகமானது. பாக்டீரியா தொற்றுகளை மிக எளிதாகக் குணப்படுத்திய இந்த மருந்தை மருத்துவர்கள் அதிசய மருந்து (Wonder Drug) என்று போற்றினார்கள். ஒரு உயிரைக் […]