அறிவியலை மிஞ்சிய அதிசயம்..! ஏலியன்கள் செதுக்கியதா? துப்பாக்கியால் சுட்டுப் பார்த்த ஆங்கிலேயர்கள்..! புதுக்கோட்டையில் இப்படி ஒரு பிரம்மாண்டமா?

Avudaiyarkovil 2026

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை), தமிழர்களின் ஈடுஇணையற்ற கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான சிற்பக்கலைக்குத் தலைசிறந்த சான்றாக விளங்கி வருகிறது. மனிதர்களால் இது சாத்தியமே இல்லை, வேற்று கிரகவாசிகளால் மட்டுமே செதுக்கப்பட்டிருக்க முடியும் என்று வெளிநாட்டினரையே வாய் பிளக்க வைத்த பிரம்மாண்ட வரலாற்றை தன்னுள் தாங்கி நிற்கிறது இத்திருத்தலம்.


இக்கோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும் உயிருள்ள மனிதர்களை போலவே மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. இதனைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இவை கல்லா அல்லது மரமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அச்சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சிலைகளின் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பார்த்த குண்டு பாய்ந்த தழும்புகள் இன்றளவும் அங்குள்ள சிலைகளின் மேல் பகுதியில் தெளிவாக காணப்படுகின்றன.

சுமார் 10 அடி அகலமும் 15 அடி உயரமும் கொண்ட ஒரே பாறையில் குதிரை, வீரன் மற்றும் தூண் ஆகியவை செதுக்கப்பட்டிருப்பதுடன், நகங்கள், நரம்புகள், தசை மடிப்புகள் வரை மனித உடற்கூறு துல்லியமாக பதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் சிலைகளில் காற்றில் பறப்பது போன்ற சேலை முந்தானை கல்லில் வடிக்கப்பட்டிருப்பது சிற்பக்கலையின் உச்சமாகும்.

உருளை, சதுரம், முறுக்குக் கம்பி என 6 வகை கம்பிகளின் வடிவங்களை அக்காலத்திலேயே தமிழர்கள் கல்லில் வடித்துக் காட்டியுள்ளனர். பவுண்டேஷன் மற்றும் தாங்கு உத்தரங்கள் (Beams) ஏதுமின்றி, கற்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து பிரம்மாண்ட மண்டபங்கள் எழுப்பப்பட்டிருப்பது வியப்பின் எல்லை. மற்ற சிவாலயங்களைப் போலன்றி, நந்தி, கொடிமரம், பலிபீடம் இல்லாத ஒரே சிவன் கோவிலான இங்கு, இறைவனும் இறைவியும் உருவமில்லா அருவமாக வழிபடப்படுகின்றனர்.

Read More : “இந்து மதம் மீது நம்பிக்கை உள்ளது”..!! மீனாட்சி அம்மன் கோயிலில் உறுதி மொழியில் கையெழுத்திட்ட முதல்வர் விஜய்..!!

Next Post

படிக்கட்டு ஏறும்போது மூச்சு வாங்குதா? அலட்சியப்படுத்தாதீங்க! பின்னணியில் அதிர்ச்சி உண்மைகள்!

Tue Sep 29 , 2026
படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது வழக்கமான நடைப்பயிற்சியின்போதோ திடீரென ஏற்படும் கடுமையான மூச்சுத்திணறலை சாதாரண சோர்வு அல்லது வயது மூப்பு என அலட்சியப்படுத்தாமல், அது இதயம் மற்றும் நுரையீரல் தரும் முக்கிய எச்சரிக்கை மணி என்பதை உணர்ந்து பரிசோதிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ உலகில் ‘டிஸ்ப்னியா’ (Dyspnea) என்று அழைக்கப்படும் இந்த மூச்சுத்திணறலானது நுரையீரல் கோளாறுகள், ரத்தசோகை, கரோனரி தமனி அடைப்பு, இதய வால்வு கோளாறுகள் மற்றும் […]
2026

You May Like