ரஷ்ய ராணுவத்தில் கூடுதலாக 15,500 வீரர்கள் சேர்ப்பு; களமிறங்கிய வடகொரிய படை!. புதினின் மாஸ்டர் பிளான்!. பின்னணி என்ன?

68581a9bd83a6 putin had previously offered to mediate the israel iran crisis but us president donald trump publ 220037378 16x9 1

உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ படைபலத்தை மேலும் 15,500 வீரர்களாக உயர்த்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதிய அவசர சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.


செப்டம்பர் 28 நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் மூலம், ரஷ்ய ஆயுதப் படைகளின் மொத்த படைபலம் 24,41,630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் நேரடி ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 15,50,500 ஆகும். இதற்கு முன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15,35,000 ஆக இருந்தது.

நடப்பு ஆண்டில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை உயர்த்தப்படுவது இது நான்காவது முறையாகும். ஏற்கனவே மார்ச், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 52,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டாய ஆள்சேர்ப்பா? ரஷ்யா மீண்டும் கட்டாய ராணுவ சேர்க்கையை தொடங்குமா என்ற ஊகங்கள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவு புதிய கட்டாய ஆள்சேர்ப்புக்கானது அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய கட்டாய ஆள்சேர்ப்பு குறித்த செய்திகளை “முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி” என்று அதிபர் புடின் மறுத்திருந்தார். ஒப்பந்த அடிப்படையிலான சேர்க்கை மற்றும் தன்னார்வலர்கள் மூலமாகவே தேவையான வீரர்கள் திரட்டப்பட்டு வருவதாக கிரெம்ளின் மாளிகை தெரிவிக்கிறது.

ஆனால், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதை மறுத்துள்ளார். ரஷ்யா பல்வேறு வழிகளில் மறைமுகமாக கூடுதல் வீரர்களை திரட்டி வருவதாகவும், வெளிநாட்டு வீரர்களையும் போரில் ஈடுபடுத்த முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

போர்க்கள அழுத்தமும் வடகொரிய வீரர்களும்: ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் போர்க்களத்தில் பெரிய அளவிலான ராணுவ நகர்வுகள் சவாலாக மாறியுள்ளன. இதனால் போரில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட ரஷ்யாவுக்குத் தொடர்ச்சியாக கூடுதல் வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

இதனிடையே, ரஷ்ய நிலப்பரப்பில் ஏற்கனவே 8,000-க்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 10,000 வடகொரிய வீரர்கள் போருக்காகத் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் உக்ரைன் உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர்க்களப் பின்னடைவுகளுக்குப் பிறகு ரஷ்யா பகுதி அளவிலான கட்டாய ஆள்சேர்ப்பை அறிவித்தது. ஆனால் தற்போதைய சூழலில், அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டாய ஆள்சேர்ப்பை அறிவிக்காமல், ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வரம்பை உயர்த்துவதன் மூலமே ரஷ்யா தனது படைபலத்தைப் பெருக்கி வருகிறது.

1newsnationuser5

Next Post

"அவருக்கு தெரியாத உலகக்கோப்பையா; கிங்கே அவர்தான்!".. 18 ஆண்டு கால 'Ro-Ko' நட்பு குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!.

Tue Sep 29 , 2026
கடந்த இரு தசாப்தங்களாக இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் தூண்களாக திகழும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் கூட்டணி, ரசிகர்களால் ‘Ro-Ko’ என அன்போடு அழைக்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, விராட் கோலியுடனான தனது பிணைப்பு, ‘Ro-Ko’ என்ற பெயரின் பின்னணி மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான தங்களது அணுகுமுறை குறித்து ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார். சமூக […]
RO KO rohit 30kb

You May Like