கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிழவி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டு கொள்ளவில்லை.  தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது. முன்னதாக, வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இருந்து, […]

வடகொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது. கிழக்காசிய நாடான வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, […]

“2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்துவரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன. அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து எப்போது வேண்டுமானாலும் […]

உக்கிரமடைந்து வரும் போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுதங்களை வழங்கியது வட கொரியாதான் என்று வெளியான தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. ஹமாஸ் கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. சுமார் 30 நிமிங்களில் 7000 வரையிலான ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலை திக்குமுக்காடச் செய்தது. இஸ்ரேலின் பாதுகாப்பு கவசமான அயர்ன் டோம் திணறும் வகையில் அதிவேக தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதையடுத்து பாராசூட்டுக்கள் […]

வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அடிக்கடி பல பகீர் உத்தரவுகளை போட்டு, உலகையே அதிர்ச்சி அடைய செய்வார். இந்நிலையில், சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகொரியாவில் கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களை பின்பற்ற தடை உள்ள நிலையில், சுமார் 70,000 […]

அணு ஆயுத சோதனை தளத்திற்கு அருகில் உள்ள வட கொரிய நகரங்களில் நிலத்தடி நீர் கதிர்வீச்சு அபாயத்தைக் கொண்டுள்ளது மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.. உலகின் மிகவும் ரகசியமான நாடாக கருதப்படும் வடகொரியா, பல்வேறு கடுமையான மற்றும் விசித்திரமான சட்டங்களை பின்பற்றி வருகிறது.. மேலும் அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது..அதன்படி 2006 மற்றும் 2017க்கு இடையே 6 அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக […]

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகளின் பெயரை, பெண்கள் வைத்துக் கொள்ள அந்நாடு தடை விதித்துள்ளது.. உலக நாடுகளில் இருந்து தனித்திருக்கும் வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் ரகசியமான நாடாகவும், உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி தனித்திருக்கும் நாடாகவும் வடகொரியா கருதப்படுகிறது. வடகொரியாவில் ஆபாச […]

சுவாச நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பிடியில் […]

ஆணாதிக்க நாடான வடகொரியாவில் கிம் ஜாங் உன் முதல் முறையாக தனது மகளுடன் கையை கோர்த்து நடந்தபடி போட்டோ வெளியாகியுள்ளது. வடகொரியா கட்டுப்பாடுகள் அதிகமாக கொண்ட ஒரு நாடு. இந்நாட்டை ஆட்சி செய்து வருபவர் கிம் ஜாங் உன். இவர் அடக்குமுறை ஆட்சி செய்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் இது நாள் வரையில் தன் மனைவியைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ குடும்பத்தை பற்றியோ எந்த தகவலையும் வெளியிட்டதில்லை. இந்நிலையில் […]