ஆசிய விளையாட்டில் தொடரும் தங்க வேட்டை!. டாப் 10க்குள் நுழைந்த இந்தியா!. துப்பாக்கி சுடுதலில் நீரூ தண்டா-கைனன் செனாய் அபாரம்!

9th gold 30kb

ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்பு அணி டிராப் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில், இந்திய ஜோடியான நீரூ தண்டா மற்றும் கைனன் செனாய் இணைந்து 34 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.


கடைசி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் கதார் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 32 புள்ளிகள் பெற்ற கதார் அணி வெள்ளிப் பதக்கத்தையும், 23 புள்ளிகள் பெற்ற சீனா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின. 12 புள்ளிகள் பெற்ற ஈரான் அணி நான்காம் இடத்தைப் பிடித்தது.

செப்டம்பர் 30 நிலவரப்படி, இந்தியா 9 தங்கம், 21 வெள்ளி மற்றும் 27 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தில் நீடிக்கிறது.

மிக முக்கியமான தருணத்தில் மிகுந்த மனஉறுதியுடனும் நிதானத்துடனும் செயல்பட்ட நீரூ தண்டா – கைனன் செனாய் இணை, இந்த மகத்தான வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கு மற்றுமொரு சிறப்பான மைல்கல்லைச் சேர்த்துள்ளது.

1newsnationuser5

Next Post

விமானம் கடத்தல்?. நடுவானில் வந்த திடீர் எச்சரிக்கை!. சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்!. பிரதமர் அவசர ஆலோசனை!.

Wed Sep 30 , 2026
துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிலைடுபாய் (flydubai) பயணிகள் விமானம், சவுதி அரேபிய வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென சர்வதேச அவசரக்கால எச்சரிக்கை சமிக்ஞையை (‘Squawk Code 7700’) அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலிய விமானப் படையின் போர் விமானங்கள் உடனடியாக விரைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து […]
aeroplane flight plane

You May Like