நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Diwali Crackers 2025

தலைநகர் டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் (NCR) நிலவும் அபாயகரமான காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் மத உணர்வுகள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு சமநிலையான ஒரு நடைமுறையை கண்டறிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.


விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், “பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிப்பது மக்களின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளைப் பாதிக்கும்; அதேநேரத்தில் நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிப்பது முதியவர்கள், நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறும். எனவே, பட்டாசு வெடிப்பதற்கான குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயிப்பதும், மாசற்ற பாதுகாப்பான பட்டாசு வகைகளை மட்டுமே அனுமதிப்பதுமே இதற்குரிய உகந்த சமரச தீர்வாக இருக்க முடியும்” என குறிப்பிட்டனர்.

மேலும், சந்தையில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட நச்சு ரசாயனமான பேரியம் (Barium) பயன்படுத்தப்படுகிறதா என்பதையும், பட்டாசுகளின் ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் உள்ளதா என்பதையும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) மற்றும் மத்திய அரசு இணைந்து தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான விரிவான கூட்டு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Read More : “அவர் ஒரு அசுரன்”!. டிரம்பையே வியக்க வைத்த தமிழ் மகன்!. கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பாராட்டு!

Next Post

பணியின் போது அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்? தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

Wed Sep 30 , 2026
அரசு ஊழியர்கள் அலுவலகப் பணியில் இருக்கும்போது அதிகபட்சமாக தங்களிடம் எவ்வளவு ரொக்கப் பணம் வைத்திருக்கலாம் என்பது தொடர்பான தெளிவான கொள்கை முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், அப்போதைய சார்பதிவாளர் கலா என்பவரிடம் கணக்கில் வராத ரூ.45,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப் […]
job salary increment

You May Like