“அவர் ஒரு அசுரன்”!. டிரம்பையே வியக்க வைத்த தமிழ் மகன்!. கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பாராட்டு!

sundar Pichai Monster trump 30kb

அவர் ஒரு அசாத்திய திறமைசாலி (“மான்ஸ்டர்”) என கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விசித்திரமான முறையில் பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வாஷிங்டனில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சுந்தர் பிச்சையைச் சுட்டிக்காட்டி, “இவரைப் பற்றி பலருக்கும் தெரியாது, ஆனால் இவர் ஒரு மான்ஸ்டர் (Monster). இவரைப் போல வாழ்வது எவ்வளவு சிறப்பானது! தினமும் செய்தியாளர்களின் கேள்விகளைச் சந்திக்க வேண்டிய அவசியமே இவருக்கு இல்லை. இவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான், இவர் பெயர் சுந்தர்!” என்று நகைச்சுவையாகப் பாராட்டினார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய சுயாதீன தணிக்கையாளர்களை நியமிக்க வழிவகை செய்யும் “தார்மீகப் பிணைப்பு” (Morally binding) ஒப்பந்தத்தை டிரம்ப் வெளியிட்டார்.

கூகுள், மெட்டா, ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக், என்விடியா மற்றும் எக்ஸ் ஆகிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். AI தொழில்நுட்பத்தின் அபாயங்களைக் கட்டுப்படுத்தவும், நிறுவனங்களே தங்களை சுயக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

சோமாலியாவில் தீவிரமடையும் பதற்றம்!. கடத்தப்பட்ட கப்பலில் இந்திய மாலுமி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை!. 16 கொள்ளையர்கள் கைது!

Wed Sep 30 , 2026
சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ‘எம்.டி ஹானர் 25’ (MT Honour 25) என்ற எரிபொருள் கப்பலை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாக மீட்டனர். இருப்பினும், பாதுகாப்புப் படையினரின் மீட்பு நடவடிக்கைக்கு முன்பாகவே கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உட்பட 5 பணியாளர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சோமாலியா டுடே’ செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பலாவு (Palau) நாட்டு கொடியுடன் சோமாலியத் தலைநகர் […]
somalia attack 30kb

You May Like