வாகன ஓட்டிகளே உஷார்!. டிராஃபிக் ஃபைன் கட்டலனா இனி கரண்ட் கட் ஆகும்!. உச்சநீதிமன்றம் அதிரடி!

traffic bike 2025

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை செலுத்தத் தவறினால், அதனை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் மக்கள் உடனடியாக அபராதத்தைச் செலுத்துவார்கள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


மின்சாரக் கட்டணத்துடன் அபராதத்தைச் சேர்ப்பது, வாகனப் பறிமுதல் மற்றும் ஆன்லைன் சேவைகளை முடக்குவது வரை பல கடுமையான நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்: நீதிபதி ஜே.பி.பார்திவாலா அடங்கிய அமர்வு, “லட்சக்கணக்கான இ-சல்லான்களை வழங்கிக்கொண்டே இருப்பது மட்டும் போதாது. அந்த அபராத தொகையை எப்படி வசூலிக்கிறீர்கள் என்பதே கேள்வி. இந்த நாட்டில் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண புதுமையான வழிகளைக் கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்தது.

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் ரூ.45,000 கோடி மதிப்பிலான இ-சல்லான்கள் வழங்கப்பட்டதில், இதுவரை ரூ.25,000 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.23,000 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகை நிலுவையில் உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.

நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோதனையின் போது நிலுவைச் சல்லான் உள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்தல்.

அபராதத்தை முழுமையாகச் செலுத்தும் வரை வாகனங்கள் தொடர்பான ஆன்லைன் சேவைகளை முடக்குதல். நிலுவை உள்ள வாகனங்களை ‘கருப்புப் பட்டியலில்’ (Blacklist) சேர்ப்பதுடன், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) மற்றும் வாகனத் தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) வழங்குவதை மறுத்தல்.

    2012-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள ‘எஸ்.ராஜசேகரன் எதிர் இந்திய யூனியன்’ என்ற சாலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில், செப்டம்பர் 28 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விரிவான தீர்ப்பு நகலில் இந்த அதிரடி வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    1newsnationuser5

    Next Post

    வீட்டில் தூசி அதிகமா சேருதா?.. தினமும் செய்யும் இந்த தவறுகள்தான் காரணம்!

    Fri Oct 2 , 2026
    வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் சில மணி நேரங்களிலேயே மீண்டும் தூசி படிந்துவிடுகிறதா? தரையை துடைப்பது மட்டும் போதாது. வீட்டுக்குள் தூசி சேருவதற்கு நாம் தினசரி பயன்படுத்தும் சில பொருட்கள், காற்றோட்டம் மற்றும் சுத்தம் செய்யும் முறைகளும் காரணமாக இருக்கலாம். கதவு, ஜன்னல் மற்றும் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகள் வழியாக வெளிப்புறத்தில் இருந்து தூசி வீட்டுக்குள் வருவது இயல்பானது. குறிப்பாக சாலையை ஒட்டிய வீடுகளில் வாகனங்கள் செல்லும்போது எழும் […]
    WhatsApp Image 2026 10 01 at 5.19.39 PM 1

    You May Like