கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ்..!! தண்ணீர் லாரி மீது மோதியதில் சுக்குநூறாக நொறுங்கிய பயங்கரம்..!!

Accident 2026

பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கிப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை எட்டையபுரம் பிரதான சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அதே வழித்தடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின்பகுதியில் பயங்கர வேகத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர மோதலில் ஆம்னி பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர் போலீசார், பலியான நபரின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய ஓட்டுநரை\க் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : இவங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு… அண்ணனுக்காக ஸ்பெஷல் டி-ஷர்ட்டில் வந்து அசத்திய தங்கை திவ்யா!. அம்மா சங்கீதா பெருமிதம்!.

Next Post

நெடுஞ்சாலை பெயர் பலகையில் இந்தி மொழி..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை..!!

Fri Oct 2 , 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டுப் பணியில், தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மும்மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்ட விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்ட இரண்டு பொறியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் (CRIF) கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகையில் மூன்று மொழிகள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பான தகவல் […]
Name Bord 2026

You May Like