ஆபாச நதி, வன்ம நதியை தோற்றுவித்த ஸ்டாலின்..! இடைத்தேர்தலில் சம்மட்டி அடி நிச்சயம்..! உருவ கேலிக்கு CM விஜய் கடும் கண்டனம்..!

Stalin Vijay 2026

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தவெக பெண் வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்து அவதூறாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை கேவலமாகப் பேசி வரும் “தீய சக்தி” திமுகவுக்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கீழ்த்தரமான அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளதாக சாடினார். தவெக வேட்பாளர் சகோதரி சத்யபாமாவின் உருவத்தை வைத்து வக்கிரமாக விமர்சித்து ஸ்டாலின் புளகாங்கிதம் அடைந்திருப்பதாகவும், திமுக வளர்த்து வரும் ஆபாச நதி, வன்ம நதி மற்றும் வக்கிர நதியை தோற்றுவித்ததே தான்தான் என்பதை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மார்தட்டி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றும் கூறினார்.

ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான திமுகவின் மரபணுவிலேயே ஆபாசமும் வக்கிரமும் ஊறிப்போயிருப்பதை தமிழக மக்கள் நீண்டகாலமாகவே நன்கு அறிந்து வைத்துள்ளனர். மேடையில் பெண்களை அருகிலேயே வைத்துக்கொண்டு, அவர்கள் கூசி அருவருப்படைவதை கூடப் பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசுவதில் கைதேர்ந்த இந்தக் கூட்டத்திற்கு தாராபுரம் தொகுதி மக்களும் ஒட்டுமொத்த தமிழகமும் இடைத்தேர்தலில் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என எச்சரித்துள்ளார். பெண்களின் மாண்பை சீர்குலைக்கும் திமுகவின் அநாகரிக அரசியலை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.

Read More : விலை உயர்வு முதல் மேட்டூர் அணை திறப்பு விழா செலவுகள் வரை!. முதலமைச்சர் விஜய் மீது இபிஎஸ் கடும் சாடல்!

Next Post

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி! தின்னர் ஊற்றி தீவைத்த கணவன்! தருமபுரியில் குலைநடுங்க வைத்த சம்பவம்!

Sat Oct 3 , 2026
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே செல்போனில் பெண் ஒருவருடன் பேசியதை கண்டித்த மனைவியின் மீது, தின்னர் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரூர் அடுத்த சங்கிலிவாடி பகுதியைச் சேர்ந்தவர் தனகோட்டி (51). கூலித் தொழிலாளியான இவருக்கு தீத்தி (48) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். தனகோட்டி தனது செல்போன் மூலம் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசி […]
Dharmapuri 2026

You May Like