கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி! தின்னர் ஊற்றி தீவைத்த கணவன்! தருமபுரியில் குலைநடுங்க வைத்த சம்பவம்!

Dharmapuri 2026

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே செல்போனில் பெண் ஒருவருடன் பேசியதை கண்டித்த மனைவியின் மீது, தின்னர் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அரூர் அடுத்த சங்கிலிவாடி பகுதியைச் சேர்ந்தவர் தனகோட்டி (51). கூலித் தொழிலாளியான இவருக்கு தீத்தி (48) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். தனகோட்டி தனது செல்போன் மூலம் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. தனது கணவருக்கு அந்தப் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த தீத்தி, அவரை கண்டித்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே தினசரி வாக்குவாதமும் குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம்போல இவர்களுக்குள் மீண்டும் கடுமையான தகராறு மூண்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற தனகோட்டி, வீட்டில் இருந்த தின்னரை எடுத்துத் தீத்தியின் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் அலறிய தீத்தியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் தீத்தி, தனது கணவர் தனகோட்டிதான் தன் மீது தின்னர் ஊற்றித் தீ வைத்தார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த அரூர் போலீசார், தப்பியோட முயன்ற தனகோட்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : ஆபாச நதி, வன்ம நதியை தோற்றுவித்த ஸ்டாலின்..! இடைத்தேர்தலில் சம்மட்டி அடி நிச்சயம்..! உருவ கேலிக்கு CM விஜய் கடும் கண்டனம்..!

Next Post

எல் நினோ தாக்கம் குறைந்ததும் என்ன நடக்கும்? குட் நியூஸ் சொன்ன இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்!

Sat Oct 3 , 2026
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான தொழில்நுட்பம் செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் தொழில்நுட்பத்தை விட மிகவும் சிக்கலானது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார். திருச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ போன்ற வானிலை நிகழ்வுகள் மழைப்பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறை எல் நினோவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழைப்பொழிவு குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலைமை சீரடைந்து நல்ல […]
elnino effect

You May Like