இன்றுடன் ஓய்கிறது அனல் பறக்கும் பிரச்சாரம்! இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்!

Vijay Stalin Eps Seeman 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.


நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய எம்.எல்.ஏ.-க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான 7 தொகுதிகளில், நீதிமன்ற வழக்குகள் உள்ள 5 தொகுதிகள் தவிர்த்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

வேட்புமனு தாக்கலின் நிறைவில், மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சுகந்தி, நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் தவெக-வின் சத்யபாமா, திமுக-வின் சுகன்யா, அதிமுக-வின் பானுமதி, சிபிஐ லட்சுமணன், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்ளிட்டோர் மோதுகின்றனர்.

தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் அனல் பறக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற நிலையில், இன்று மீண்டும் தாராபுரத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். மறுபுறம் திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரும், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஈடுபடுகின்றனர்.

இன்று மாலையுடன் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் ஓயவுள்ள நிலையில், அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Read More : எல் நினோ தாக்கம் குறைந்ததும் என்ன நடக்கும்? குட் நியூஸ் சொன்ன இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்!

Next Post

மத்திய-மாநில அரசுகள் என்ன செய்கின்றன?. தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!.

Sun Oct 4 , 2026
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை மாலை கைது செய்து சிறைபிடித்துள்ளனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டோக்கன் அலுவலகத்தில் முறையான அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, 400-க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, […]
fisherman boat 2025

You May Like