ஆசியாவின் ஆஸ்கர் விருதை வென்ற தமிழ் இயக்குநர்!. சர்வதேச அரங்கில் கோலோச்சும் தமிழ் சினிமா!. யார் இந்த கௌதம்?

Asia Pacific Screen Awards 30kb

Members of the Problematic Family படத்தின் இயக்குநர் ஆர்.கௌதம், 2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் திரை விருதுகளில் (Asia Pacific Film Awards) மதிப்புமிக்க ‘யங் சினிமா அவார்ட்’ (Young Cinema Award) விருதை வென்று அசத்தியுள்ளார். இயக்குநர் கௌதம் இயக்கிய முதல் படத்திலேயே இந்த மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்.கௌதம் இயக்கத்தில் உருவான இப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் (Berlin International Film Festival) திரையிடப்பட்டது. இதன் மூலம் அப்பட்டியலில் இடம்பெற்ற நான்காவது தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்றதுடன், பெர்லின் விழாவில் தனது படம் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர் என்ற வரலாற்றுச் சாதனையையும் கௌதம் படைத்தார். மேலும், இப்படம் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்கப் படமாகவும் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.

படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்கள்: மதுபோதைக்கு அடிமையான மகன் ஒருவன் காலமானதைத் தொடர்ந்து, குடும்பத்தில் ஏற்படும் பிளவுகள் மற்றும் உறவுகளின் சிதைவுகளை இப்படம் யதார்த்தமாகப் பேசுகிறது.

இப்படத்தில் ‘கூழாங்கல்’ பட புகழ் கருத்தடையான், அஜித், உவேஸ்ரீ ஜனார்த்தனன், காஞ்சனா செந்தில், டி.பி.எஸ்., சரவண சித்தார்த் எஸ் மற்றும் அஸ்வினி எஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் கௌதம், “நான் வட சென்னையைச் சேர்ந்தவன். ஸ்டான்லி மருத்துவமனை முதல் புழல் வரையிலான சென்னையை ஒரு புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதேசமயம், அழகுணர்ச்சிக்காக யதார்த்தத்தை பலிகொடுக்க நான் விரும்பவில்லை. எனக்கு நன்கு பரிச்சயமான பகுதி என்பதால் இந்தப் படப்பிடிப்புத் தளத்தைத் தேர்ந்தெடுத்தேன்,” என்று கூறியுள்ளார்.

1newsnationuser5

Next Post

வேலைக்காக சென்ற இளம்பெண்.. மயக்க மருந்து கொடுத்து 2 நாட்கள் செய்த கொடூரம்!

Tue Oct 6 , 2026
இரண்டு நாட்கள்… வெளியுலக தொடர்பே இல்லாமல் ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண். சுயநினைவையே இழக்கச் செய்யும் வகையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடி வந்த பெண்ணை சிலர் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நல்ல வேலை மற்றும் வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டி அவரை குறிப்பிட்ட இடத்திற்கு […]
becd9a7fa91c6bf4c04ce6c22dc407cc50ccd48a49750c7d92d71963fc1b0eb0

You May Like