காதலனுடன் தனிமையில் இருந்த பிளஸ்2 மாணவி! கூட்டு பலாத்காரம் செய்த கொலை குற்றவாளிகள்! நெல்லையில் திடுக்கிடும் சம்பவம்!

Rape 2025 1

நெல்லையில் 17 வயது பள்ளி மாணவிக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து, நகைகளைப் பறித்துச் சென்றதுடன், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டவுன் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அந்த மாணவி, பேட்டை மலையாள மேடு பகுதியில் தனது வகுப்புத் தோழனான காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், இருவரையும் மிரட்டித் தாக்கியுள்ளது. தொடர்ந்து மாணவியை அச்சுறுத்தி கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, மாணவி மயக்கமடைந்த நிலையில் அவர் அணிந்திருந்த கம்மல், தங்கச் செயின் மற்றும் அவரது நண்பரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அக்கும்பல் தப்பியோடியுள்ளது. மேலும், செல்போனில் மாணவியின் அந்தரங்கப் படங்களை எடுத்துக்கொண்டு, வெளியில் சொன்னால் இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகரக் காவல் ஆணையர் தேஷ்முக் சஞ்சய் சேகர் உத்தரவின்பேரில் மகளிர் காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அதிர்ச்சியிலும் அச்சத்திலும் இருந்த மாணவி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த நிலையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தென் பத்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) மற்றும் 17, 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் இக்கொடூர செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதில் சுரேஷ் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகளும், 14 வயது சிறுவன் மீது ஒரு கொலை வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் செல்போனைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Read More : மாணவர்களின் பணத்தை சுரண்டுவதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்! அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கோர்ட்!

Next Post

நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை! எஜமானர்களை திருப்திப்படுத்த துடிக்கும் தவெக அரசு! விளாசிய ஸ்டாலின்!

Sat Oct 10 , 2026
நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க போராடும் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஒடுக்கி வருவதாக தனது எக்ஸ் தள பதிவில் மிக காட்டமாக தெரிவித்துள்ளார். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக முன்னாள் முதல்வர்களான பினராயி விஜயன், அரவிந்த் கேஜரிவால், மமதா பானர்ஜி, மாணிக் சர்க்கார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
stalin koladhur case 30kb

You May Like