மயங்கிய பெண் தொழிலாளியை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலாத்காரம் செய்த வாலிபர்! திருப்பூரில் திடுக்கிடும் சம்பவம்!

rape 1

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே உடல்நலக் குறைவால் மயக்கமடைந்த சக பெண் தொழிலாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மமிதா மொண்டல் மற்றும் அவரது மனைவி சாயந்தி தாஸ் ஆகியோர், திருப்பூர் அவிநாசிபாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். அதே நிறுவனத்தில் அவர்களின் சொந்த ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணா மொண்டல் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக். 9-ஆம் தேதி இரவு தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் சாயந்தி தாஸ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராமகிருஷ்ணா மொண்டல் தனது இருசக்கர வாகனத்தில் சாயந்தி தாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தனிமையான காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமகிருஷ்ணா மொண்டல், மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வந்த பெண், நடந்த கொடூரத்தை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், உடனடியாக அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராமகிருஷ்ணா மொண்டலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : மேடையில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! உற்று கவனித்த பிரதமர் மோடி!

Next Post

காதல் மனைவியின் அந்தரங்க வீடியோ! போலீஸ் ஸ்டேஷனில் வெளுத்து வாங்கிய உறவினர்கள்! தடுத்த போலீசுக்கும் தர்ம அடி!

Sun Oct 11 , 2026
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம் பிரகாஷ் – சண்முகப்பிரியா ஆகியோர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு, வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராம் பிரகாஷுடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக சண்முகப்பிரியா தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராம் பிரகாஷ், இருவரும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்களை சமூக […]
Kovai 2026

You May Like