மேடையில் முதல்வர் விஜய் செய்த சம்பவம்! உற்று கவனித்த பிரதமர் மோடி!

Modi Vijay 2026

சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடியுடன் இணைந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ தூர வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த அவர், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கல்வி நிதி மற்றும் முக்கிய போக்குவரத்து திட்டங்களுக்கான ஒப்புதல்களை நேரடியாக பிரதமர் முன்னிலையிலேயே முன்வைத்தார்.


விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தொன்மையான மொழி மற்றும் கலாச்சாரப் பெருமை கொண்ட தமிழ்நாட்டில், 100 நாட்களை கடந்த தங்களது அரசு வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் சமூக நீதியுடன் கூடிய அனைத்து தரப்பு வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் தொலைநோக்கு திட்டங்களை தமிழ்நாடு தீட்டி வருவதாகவும் தெரிவித்தார். மத்திய – மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் அதன் பலன் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் என்பதால், சென்னைக்கு அப்பால் அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்வதில் அரசு முனைப்புடன் இருப்பதாகக் கூறினார்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ 3-ம் கட்ட திட்டங்களான விமான நிலையம் – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் மற்றும் கோயம்பேடு – பட்டாபிராம் உள்ளிட்ட 65 கி.மீ நீள வழித்தடங்களுக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.

மேற்கு மற்றும் தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு – கர்நாடகத்தை இணைக்கும் ஓசூர் – பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் நேரில் கேட்டுக்கொண்டார்.

நெடுஞ்சாலை விரிவாக்கங்களை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை மற்றும் கரூர் – கோவை வழித்தடங்களை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டங்களுக்கும், மாதவரம் – சோழவரம் இடையிலான உயர்மட்டச் சாலைக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், தென் மாநிலங்களின் நீர்வளப் பாதுகாப்பை உறுதி செய்யும் வரலாற்று சிறப்புமிக்க கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்புப் பணியை தேசிய திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரினார்.

இறுதியாக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி நிலுவைத் தொகையை எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்திய முதலமைச்சர், தமிழ்நாடு சமர்ப்பித்துள்ள மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Read More : கடன் தவணை வசூலிக்கச் சென்ற ஊழியர் கொடூரக் கொலை.. பனைத் தோட்டத்தில் புதைத்த கொலையாளி!

Next Post

சடலத்தோடு உறவு.. துண்டு துண்டாக வெட்டி சிதைத்த கொடூரம்! 10 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்த மர்மம்!

Sun Oct 11 , 2026
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இளம் பெண் நடனக் கலைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலத்துடன் உறவு கொண்டு, உடற்பாகங்களை சிதைத்த அதிர்ச்சி வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண்ணுக்கு நீதிமன்றம் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவரது காதலனுக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கின் முழுப் பின்னணியும் அம்பலமாகியுள்ளது. தெற்கு டகோட்டா பகுதியைச் சேர்ந்த மோர்கன் […]
America 2026

You May Like