காதல் மனைவியின் அந்தரங்க வீடியோ! போலீஸ் ஸ்டேஷனில் வெளுத்து வாங்கிய உறவினர்கள்! தடுத்த போலீசுக்கும் தர்ம அடி!

Kovai 2026

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம் பிரகாஷ் – சண்முகப்பிரியா ஆகியோர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு, வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராம் பிரகாஷுடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக சண்முகப்பிரியா தெரிவித்தார்.


இதனால் ஆத்திரம் அடைந்த ராம் பிரகாஷ், இருவரும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சண்முகப்பிரியா புகார் அளித்தார். விசாரணைக்கு வந்த ராம் பிரகாஷை சண்முகப்பிரியாவின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். தடுக்க சென்ற போலீசாரையும் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த ஏட்டு பாலமுருகன், பிரியா, சம்பவத்தின் போது மயங்கி விழுந்த சண்முகப்பிரியா ஆகியோர் சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். போலீசாரை தாக்கியது தொடர்பாக பெண்ணின் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Read More : மயங்கிய பெண் தொழிலாளியை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலாத்காரம் செய்த வாலிபர்! திருப்பூரில் திடுக்கிடும் சம்பவம்!

Next Post

ஏன் எனக்கு ரீல்ஸ் எடுக்க தெரியாதா? யார் ஆட்சி நடத்தினாலும் அதிமுக தான்..! தவெக அரசை விளாசிய இபிஎஸ்!

Sun Oct 11 , 2026
சென்னையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டதே முந்தைய அதிமுக அரசுதான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]
Eps Vijay 2026

You May Like