தோனி, கோலியின் சகாப்த சாதனை முறியடிப்பு!. புதிய வரலாறு படைத்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்!

Shreyas Iyer 30kb

இந்தூர் ஹோல்கர் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை 209 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது.


இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சாதனைப் பட்டியலில் உச்சத்தை அடைந்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அதிக முறை 200+ ரன்களைக் கடந்த அணியை வழிநடத்தியவர்களின் பட்டியலில், இதுவரை முன்னணியில் இருந்த முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை (36 முறை) ஷ்ரேயாஸ் ஐயர் முறியடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியின் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது 37 முறைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அதிக முறை 200+ ரன்கள் குவித்தவர்களின் பட்டியல்

37 முறைகள் – ஷ்ரேயாஸ் ஐயர் (133 போட்டிகள்)

36 முறைகள் – எம்.எஸ். தோனி (331 போட்டிகள்)

29 முறைகள் – விராட் கோலி (193 போட்டிகள்)

27 முறைகள் – டூ ப்ளெசிஸ் (235 போட்டிகள்)

25 முறைகள் – ரோகித் சர்மா (225 போட்டிகள்)

23 முறைகள் – சூர்யகுமார் யாதவ் (73 போட்டிகள்)

    வெற்றிக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தையும், பேட்டர்களின் சிறப்பான தொடக்கத்தையும் பாராட்டினார். பந்துவீச்சாளர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவுடனும் நம்பிக்கையுடனும் இருந்தனர். அபிஷேக் சர்மா பவர்20 ஓவர்களில் கொடுத்த தொடக்கம் மிக அற்புதம். இஷான் கிஷனும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நாங்கள் ஆட்டத்தின் போக்கை மாற்ற அனுமதிக்கவில்லை” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

    1newsnationuser5

    Next Post

    BREAKING| இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை! 3 புதிய இடங்களை அறிவித்தது டெல்லி காவல் துறை!

    Mon Oct 12 , 2026
    நாட்டின் தலைநகர் டெல்லியில் பல தசாப்தங்களாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கான முக்கிய மையமாக விளங்கிவந்த ‘ஜந்தர் மந்தர்’ பகுதி, இனி அதிகாரப்பூர்வ போராட்ட களமாகச் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் பகுதிக்கான போராட்ட அனுமதிகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு மாற்றாக 3 புதிய மாற்று இடங்கள் போராட்டக் களங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11, […]
    Jantar Mantar protests 30kb

    You May Like