ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடையை முழுநேரக் கடையாக மாற்றி வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை மற்றும் நாள் ஒன்றுக்கு 347 கோடி ரூபாய் வட்டி செலுத்தும் நிலை உள்ள சூழலிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், குழந்தைகள் நலப் பெட்டகம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக பெண் குழந்தைகள் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் உன்னத திட்டத்தை முதல்வர் விஜய் விஜய் கொண்டுவர உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் தங்களின் அரசு சார்ந்த கோரிக்கைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் நேரடியாக தன்னிடம் முறையிடலாம் என்றும் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள அரசு முழுவீச்சில் தயாராக இருப்பதாகவும், ஆந்திர அரசிடம் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கக் கோரி முதல்வர் விஜய் ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தலைவராக விஜய் திகழ்கிறார். நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவில் இருந்து நீக்கினார்; அங்கிருந்து வெளியே வந்ததால்தான் இன்று வருவாய்த்துறை அமைச்சராக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இல்லையென்றால் நானும் அவர்களுடன் சேர்ந்து எதிர் வரிசையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அதிமுக மாறிவிட்டது. அக்கட்சியில் இருந்து மிக விரைவில் 15 முக்கிய நிர்வாகிகள் வெளியேறி நம்மிடம் வர உள்ளனர்; நேற்று கூட அவர்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
Read More : தேர்தல் கமிஷனருக்கு எதிராக டெல்லியில் அடங்காத கொந்தளிப்பு! தடையை மீறி ஜந்தர் மந்தரில் புகுந்ததால் பரபரப்பு!



