உலகமே திணறினாலும் இந்தியா கெத்து காட்டும்… IMF வெளியிட்ட சூப்பர் செய்தி!. சீனாவையே மிஞ்சும் வளர்ச்சி கணிப்பு!

india gdp

உலகளாவிய பொருளாதாரச் சூழல் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், இந்தியாவின் உள்நாட்டு தேவையும் சேவை துறையின் வளர்ச்சியும் வலுவாக இருப்பதால், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை சர்வதேச நாணய நிதியம் (IMF) உயர்த்தியுள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.4 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக ஐஎம்எஃப் தற்போது கணித்துள்ளது.


முன்னதாக உலக வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டும் 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியமும் தனது கணிப்பை உயர்த்தி அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற உலகளாவிய சவால்கள் இருந்தாலும், வலுவான உள்நாட்டுச் சந்தையும் சேவைத் துறையின் சிறப்பான செயல்பாடும் இந்தியப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு உயர்த்தப்பட்டதற்குச் சில முக்கியக் காரணங்களை ஐஎம்எஃப் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் உள்நாட்டு நுகர்வு மற்றும் தேவையின் வளர்ச்சி, சேவைத் துறையின் நிலையான பங்களிப்பு, இளைஞர்களை அதிகமாகக் கொண்ட சாதகமான மக்கள் தொகை அமைப்பு மற்றும் நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றன.

அதேவேளையில், உலகளாவிய பொருளாதாரம் சீரான மீட்சியைக் காட்டி வந்தாலும், அந்த மீட்சித் திறன் சற்று தளர்வடைந்தும் சீரற்ற நிலையிலும் உள்ளதாக ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது. 2026-ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 3.1 சதவீதமாகவும், சீனா 4.5 சதவீதமாகவும், அமெரிக்கா 2.3 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 7 சதவீத வளர்ச்சியுடன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

விஷவாயு தாக்கி 2 பேர் பலியான விவகாரம்! கால்வாயில் இறங்க சொன்ன அதிகாரி யார்? வெளியான திடுக்கிடும் தகவல்!

Tue Oct 13 , 2026
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் தென்றல் நகர் மூன்றாவது தெருவில், மழைநீர் வடிகால் கால்வாயில் இறங்கி பழுதான கழிவுநீர் மோட்டாரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி நவீன் மற்றும் பாஷா ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து நவீனின் குடும்பத்தினர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் […]
Death 2026

You May Like