கோயில்களுக்குள் மொபைல் கொண்டு செல்லலாம்! இதை செய்தால் நடவடிக்கை பாயும்! புதிய தளர்வுகளுடன் அறநிலையத்துறை எச்சரிக்கை!

Temple Photo 2026

தமிழகத்தில் உள்ள முக்கியமான 52 முதுநிலை கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முழுமையான தடை அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள், அவசர தேவைகளுக்கோ அல்லது குடும்பத்தினரையோ உடனடியாக தொடர்பு கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்த தடையை மறுபரிசீலனை செய்து தளர்த்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.


பக்தர்களின் இந்த நடைமுறை சிக்கல்களை பரிசீலித்த இந்து சமய அறநிலையத்துறை, தற்போது விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, கோவில்களுக்குள் பக்தர்கள் மொபைல் போன்களை தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கோவில் வளாகத்திற்குள் இருக்கும் வரை மொபைல் போன்களை கண்டிப்பாக ‘சுவிட்ச் ஆப்’ (Switch Off) செய்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள், சிறப்பு பூஜைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, செல்பி எடுப்பது மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்ற செயல்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.

Read More : தேர்தல் கமிஷனருக்கு எதிராக டெல்லியில் அடங்காத கொந்தளிப்பு! தடையை மீறி ஜந்தர் மந்தரில் புகுந்ததால் பரபரப்பு!

Next Post

TET தேர்ச்சி பெற்றவர்களே கவனம்.. சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய 5 நாட்கள் மட்டுமே!

Tue Oct 13 , 2026
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய 5 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் […]
Untitled design 2024 05 18T135343.886 1

You May Like