அந்தரங்க உறுப்பில் மிதித்தார்கள்; கேட்கும் திறனை இழந்த மாணவி!. டெல்லி போலீஸின் அராஜகத்தை போட்டுடைத்த மாணவர்கள்!

Delhi Police 30kb

போராட்டத்தின் போது டெல்லி காவல்துறை தங்களை தாக்கியதாக தேசிய மாணவர் சங்கம் (NSUI) மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெண் போராட்டக்காரர்கள் தாங்கள் எதிர்கொண்ட கொடூரமான அனுபவங்களை கண்ணீருடன் விவரித்தனர்.


செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பெண் போராளியை “எங்கள் ஷெர்னி” (சிங்கப் பெண்) என்று வர்ணித்தார். அவர் கடுமையாகத் தாக்கப்பட்ட போதிலும், பயப்படவுமில்லை, அவர் இதயத்தில் வெறுப்பு உருவாகவுமில்லை என்று பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இதுதான் இந்தியா. அமித் ஷா அவர்களே, நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே இந்து, முஸ்லிம், சாதி, ஆண், பெண் என்ற பேதங்கள் இல்லை; ஒரே ஒரு குரல், ஒரே ஒரு போராட்டம் மட்டுமே உள்ளது. இது இந்தியாவின் குரல். இந்த அரசு மாணவர்களின் குரலுக்கு எதிராக நிற்கிறது,” என்று கடுமையாக விமர்சித்தார். எதிர்காலத்தில் உரிய ஆதாரங்களைச் சேகரித்து பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்றும் அவர் எச்சரித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மாணவி ஒருவர் பேருந்துக்குள் தனக்கு நிகழ்ந்த வன்முறை குறித்துக் கூறுகையில், “நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது மூன்று பேருந்துகளில் தடுத்து வைக்கப்பட்டோம். அப்போது பெண் காவலர் சஞ்சல் யாதவ் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கீழே தள்ளினார். என் முகத்திலும் காது அருகிலும் நகங்களால் கீறினார். நான் தடுத்தபோது என் முகத்தில் ஓங்கி அறைந்தார்.

கன்னாட்டு பிளேஸ் காவல் நிலையம் அருகில் பேருந்து நின்றபோது, அதீரா என்ற மற்றொரு என்.எஸ்.யு.ஐ மாணவியின் பிறப்புறுப்புப் பகுதியில் காவலர் எட்டி உதைத்ததாகவும் அந்தப் பெண் மேலும் குற்றம் சாட்டினார்.

கேரளாவைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவியான அதீரா பேசுகையில், தங்களை காவலில் எடுக்கும் போது பேருந்தில் பெண் காவலர்கள் யாரும் இருக்கவில்லை என்றும், தான் பெண் காவலர் குறித்துக் கேட்டதற்காக தன் கன்னத்திலும் காதின் மீதும் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதன் காரணமாகத் தனது காது மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு காது கேட்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். ராகுல் காந்தியும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

1newsnationuser5

Next Post

அரிசி விலை உயர்வு எதிரொலி.. பொரி விலையும் ஏறுமா?

Wed Oct 14 , 2026
அரிசி விலை உயர்வு, மழையால் பாதிக்கப்பட்ட உற்பத்தி என இந்த ஆண்டு பொரி விற்பனையில் மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. பண்டிகைக்காகப் பொரி வாங்கத் தயாராகும் மக்களுக்கு, கடந்த ஆண்டைப் போலவே விலை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், பொரி தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு தினமும் சுமார் 3,000 மூட்டை பொரி தயாரிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை […]
d67006fe2ad265390a5eeb313f10106511b6e0fa4070110e12b5033bf3196d47

You May Like