நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தற்போது 24-வது தவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-வது தவணை விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்த தவணை தொகை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 24-வது தவணை விடுவிக்கப்படும் உறுதியான தேதியை மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் போலியான தேதிகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே கவனிக்குமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் நிதி நேரடியாக வங்கி கணக்குகளுக்கே மாற்றப்படுவதால், பயனாளிகளின் ஆவணங்களில் எந்தவித குளறுபடியும் இருக்கக்கூடாது என மத்திய வேளாண்மை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. தவணை தொகை தடையின்றி வங்கி கணக்கில் வந்து சேர, விவசாயிகள் உடனடியாக மூன்று முக்கிய பணிகளை நிறைவு செய்ய வேண்டும்:
e-KYC நடைமுறை: இதுவரை e-KYC செய்யாத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்கள் வழியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ உடனடியாக இதை முடிக்க வேண்டும்.
ஆதார் இணைப்பு: விவசாயியின் வங்கி கணக்குடன் ஆதார் விவரங்கள் முறையாக இணைக்கப்பட்டு, பெயர் மற்றும் விபரங்கள் பிழையின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு: தேவையற்ற வதந்திகளை நம்பாமல், தங்களின் தகுதி நிலை மற்றும் வங்கி விவரங்களை அறிந்துகொள்ள pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக சென்று சரிபார்க்க வேண்டும்.
தொழில்நுட்ப காரணங்கள் அல்லது ஆவண குறைபாடுகளால் முந்தைய தவணை பெறாத தகுதியுள்ள விவசாயிகளுக்கு, அந்த தவறுகள் தற்போது சரிசெய்யப்பட்டிருந்தால், முந்தைய தவணை ரூ.2,000 மற்றும் நடப்பு தவணை ரூ.2,000 என சேர்த்து ஒரே நேரத்தில் ரூ.4,000 வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், இது சரிபார்க்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்ப்பது எப்படி? வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்! முழு விவரம் உள்ளே!



