நீங்க கேக்குற பணத்தை தர முடியாது! மன்னிப்பும் கேட்க மாட்டேன்! எடப்பாடிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி!

Nirmal Eps 2026

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் சொத்துகளை முறைகேடாக தன் வசப்படுத்துவதாகவும், பாரம்பரியமிக்க இயக்கத்தை ஒரு வெறும் கடித முகப்பு அமைப்பாக மாற்றி விட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் அண்மையில் காரசாரமாக விமர்சித்திருந்தார்.


அதிமுக நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், கட்சியின் பொதுச்செயலாளரை வேண்டுமென்றே அவமதித்ததாகவும் கூறி, அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும், நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த சட்ட நோட்டீஸுக்கு அமைச்சர் நிர்மல் குமார் தரப்பில் பதில் அளித்துள்ளது. அதிமுகவில் தலைமை பொறுப்பு சார்ந்த மோதல்கள் நிலவி வருவதை தேர்தல் ஆணைய ஆவணங்களும் நீதிமன்ற பதிவுகளுமே உறுதி செய்வதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமை அதிகாரத்தில் உள்ள நபரை விமர்சனம் செய்வது அந்த இயக்கத்தின் மீதான அவதூறாக ஒருபோதும் மாறாது என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனி நபர் என்ற முறையில் இந்த நோட்டீஸை அனுப்பாமல், பொது அமைப்பான கட்சியின் பெயரால் அனுப்பியுள்ளதால் இதற்கு தனிப்பட்ட முறையில் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக தரப்பு நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளவாறு பொதுவெளியில் மன்னிப்பு கோரவோ அல்லது கோரப்பட்ட ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்கவோ முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Read More : கைலாசாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்! ஆசி வழங்கிய நித்யானந்தா! வெடித்த அரசியல் சர்ச்சை!

Next Post

இளம்பெண்ணுடன் உடலுறவு! ரகசிய வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவன்! கடைசியில் நடந்த திருப்பம்!

Thu Oct 22 , 2026
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஷார்லட் பகுதியில் இயங்கி வரும் பல்கலைக்கழக வளாகத்தில், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்ததை ரகசியமாக வீடியோ பதிவு செய்து, அதனை இணைய அரட்டை குழுவில் பகிர்ந்ததாக 19 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 19 அன்று, அலெக்சாண்டர் மைக்கேல் இவானாஃப் என்ற இளைஞர், ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது தனது செல்போன் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் […]
Sex 2025

You May Like