இளம்பெண்ணுடன் உடலுறவு! ரகசிய வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவன்! கடைசியில் நடந்த திருப்பம்!

Sex 2025

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஷார்லட் பகுதியில் இயங்கி வரும் பல்கலைக்கழக வளாகத்தில், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்ததை ரகசியமாக வீடியோ பதிவு செய்து, அதனை இணைய அரட்டை குழுவில் பகிர்ந்ததாக 19 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கடந்த செப்டம்பர் 19 அன்று, அலெக்சாண்டர் மைக்கேல் இவானாஃப் என்ற இளைஞர், ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது தனது செல்போன் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் எவ்வித அனுமதியும் இன்றி, 32 உறுப்பினர்கள் கொண்ட குழுவின் அரட்டை பகுதிக்கு அந்த அந்தரங்க வீடியோவை அவர் அனுப்பி வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், தனிநபர் அந்தரங்க படங்களை வெளியிட்டது மற்றும் அனுமதியின்றி ரகசியமாக வீடியோ எடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் இவானாஃப் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின்போது, அந்த வீடியோவை வேண்டும் என்றே திட்டமிட்டு பதிவு செய்ததையும், பெண்ணின் சம்மதம் இன்றி அரட்டை குழுவில் பகிர்ந்ததையும் இவானாஃப் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கைதான அவர், 10 ஆயிரம் டாலர் பிணை தொகை செலுத்தி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட நபர் தங்கள் பல்கலைக்கழக மாணவர் இல்லை என வடக்கு கரோலினா பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். வளாகத்தில் உள்ள எவரும் இதுபோன்ற வன்ம செயல்களில் ஈடுபடுவதை நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும், இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நீங்க கேக்குற பணத்தை தர முடியாது! மன்னிப்பும் கேட்க மாட்டேன்! எடப்பாடிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி!

Next Post

கிடைத்தது ஜாமீன்! நாம் தமிழர் கட்சி கார்த்திகா விடுதலை! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Thu Oct 22 , 2026
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் சாலை மறியல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது நபர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனையற்ற பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் வாகன அணிவகுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட வேளையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் […]
Kathika 2026

You May Like