கிடைத்தது ஜாமீன்! நாம் தமிழர் கட்சி கார்த்திகா விடுதலை! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Kathika 2026

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் சாலை மறியல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட ஒன்பது நபர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனையற்ற பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.


தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் வாகன அணிவகுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட வேளையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி செயலாளரும் வேட்பாளருமான கார்த்திகா கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார பாதையில் வைக்கப்பட்டிருந்த கட்சி பதாகையை அகற்ற முயன்ற காவல்துறையினரை ஒருமையில் பேசி தாக்க முயன்றது, பொதுக்கூட்ட பகுதி வழியாக குழந்தையுடன் சென்ற தவெக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் இணையத்தில் அவதூறு வீடியோ வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் 12 சட்டப் பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2 தினங்களுக்கு முன்பு கார்த்திகா மற்றும் அவருடன் இருந்த 8 கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் தங்களுக்கு பிணை வழங்க கோரி கார்த்திகா தரப்பில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கும் பிணை வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More : நீங்க கேக்குற பணத்தை தர முடியாது! மன்னிப்பும் கேட்க மாட்டேன்! எடப்பாடிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி!

You May Like