வங்கக் கடலில் நடந்த மாற்றம்! சென்னையை குறிவைக்கிறதா அர்னாப் புயல்? 4 நாட்களில் தீவிரம்!

cyclone n

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த வானிலை நகர்வு அடுத்தடுத்த கட்டங்களாக தீவிரமடைந்து, நாளை (அக். 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து அக். 25 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேற்கு – வடமேற்கு திசை வழியே நகர்ந்து, அக். 26 ஆம் தேதி வாக்கில் மேற்கு – மத்திய வங்கக்கடல் பகுதியில் இது அதிகாரப்பூர்வமாக புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச அளவில் இந்த புதிய புயலுக்கு ‘அர்னாப் புயல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தீவிரமடையும் இந்த புயல் காரணமாக தமிழக எல்லைகளில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்காது எனவும், புயலின் நகர்வு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி செல்லும் எனவும் வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரபல்ய தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்வரும் நான்கு முதல் 5 நாட்களில் தீவிரமடைய உள்ள அர்னாப் புயலால் தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான தீவிர பாதிப்பும் இருக்காது எனவும், இது சென்னை உள்ளிட்ட வட கடலோர பகுதிகளை கடந்து ஆந்திர மாநிலத்தை நோக்கியே நகரும் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால் சென்னை மற்றும் தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்! செஞ்சி சிறுமி வழக்கு! அடுத்தடுத்து வெளியாகும் திக் திக் தகவல்கள்! துப்பு துலக்கிய சிபிசிஐடி!

You May Like