தமிழகத்தை உலுக்கிய சம்பவம்! செஞ்சி சிறுமி வழக்கு! அடுத்தடுத்து வெளியாகும் திக் திக் தகவல்கள்! துப்பு துலக்கிய சிபிசிஐடி!

Gingee 2026

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் 12ம் தேதி மாயமானார். அதற்கு முன் தினம் இரவு தான் சிறுமி தனது 7வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி இருந்தார். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, பெற்றோருடன் வழக்கம்போல் தூங்கச் சென்றார். ஆனால், மறுநாள் அதிகாலை சிறுமியை காணவில்லை.


சிறுமியின் உறவினர்கள், கிராமமக்கள் இணைந்து வீட்டின் அருகிலுள்ள வயல்வெளி, கால்வாய் பகுதிகளில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

வீட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. அப்பகுதியில் உள்ள கிணறுகள், நீர்த்தேக்கங்கள், விவசாய நிலங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. ட்ரோன்கள் கொண்டும் தேடப்பட்டது.

சிறுமி மாயமாகி 10 நாட்களுக்கு மேலாகியும் போலீசுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான குழுவினா் விசாரணை தொடங்கினர். விழுப்புரம் மாவட்ட போலீஸாரிடம் சிறுமி மாயமான வழக்கு தொடா்பான ஆவணங்களை பெற்றுள்ளனர்.

தற்போது வழக்கின் நிலவரம் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி மாயமான விவகாரம் தற்செயலானது இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என மூத்த போலீஸ் அதிகாரி சந்தேகம் தெரிவித்துள்ளார். மர்ம கும்பல் சிறுமியை கடத்தி சென்று, அருகில் உள்ள கிராமங்களின் வழியே தப்பியோடியிருக்கலாமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஆலம்பூண்டி, திருவண்ணாமலை மற்றும் நடுப்பட்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அனைத்தும் சல்லடைபோட்டு ஆராயப்பட்டு வருகின்றன. வழக்கு தொடர்பாக சந்தேகத்திற்குரிய வகையில் பதிவான சுமார் 600 செல்போன் அழைப்புப் பதிவுகளும் சோதிக்கப்பட்டு வருகின்றன.

சிறுமி மாயமான பகுதியில் வசிக்கும் குற்ற பின்னணி உள்ளவா்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் தொடா்புடையவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, சிறுமி மாயமான பகுதி முழுவதையும் வரைபடமாக்கி சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மாயமான சிறுமி குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஆசிய விளையாட்டில் அசத்திய தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்! ரூ.1.25 கோடி பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

Next Post

கள்ளத்தொடர்பு மட்டுமே துன்புறுத்தலாக கருத முடியாது! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

Fri Oct 23 , 2026
கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணமான தம்பதி ஒருவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. கணவர் மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு குடும்பத்தை சரிவர கவனிக்காமல் கைவிட்டதாக கூறி, கடுமையான மனவேதனை அடைந்த மனைவி தனது பச்சிளம் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்டார். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணவர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் […]
illegal rights

You May Like