புயலால் கதிகலங்கும் தமிழகம்! 3 மாவட்டங்களில் இன்று பேய் மழை பெய்யும்! Red Alert விடுத்த வானிலை மையம்!

Red Alert Cyclone Over Tamil Nadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை ஒட்டிய மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


வானிலை மாற்றங்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதேபோல் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. நாளையும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர பகுதி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளதுடன், படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Read More : உருவாகிறது புதிய புயல்! 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்களுக்கு உச்சகட்ட வார்னிங்!

Next Post

‘குக் வித் கோமாளி’ புகழ் செப் தாமு காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Sun Oct 25 , 2026
தமிழக மக்களிடையே தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞர் செப் தாமு (72), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். தனது தனித்துவமான சமையல் திறமை, பல்வேறு சாதனைகள், இயல்பான பேச்சாற்றல் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவரது மறைவு, சமையல் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே. தாமோதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட செப் தாமு, சமையல் […]
WhatsApp Image 2026 10 25 at 11.23.08 AM

You May Like