இன்று எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்? 31 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வார்னிங்!

Heavy Rain 2026

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவி வரும் வளிமண்டல சுழற்சியில் இருந்து, கேரளா வழியாக வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் எதிரொலியாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மற்றும் உள் மாவட்டங்களிலும், சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கடலூர், நாகை, கரூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Read More : WARNING| வரலாறு காணாத வெப்பம்!. பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை முதல்முறையாக 30°C-ஐ தொட்டது!. பெரும் பாதிப்பில் இந்தியா!.

Next Post

Sunday அதுவுமா இப்படியா? மீண்டும் எகிறியது வெங்காயம் விலை! ஒரு கிலோ டாப் ரேட்!

Sun Oct 25 , 2026
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து 50 ரூபாயை கடந்தது. இதையடுத்து ரேஷன் கடைகள் வழியாக கிலோ 35 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுத்த போதிலும், வெளிச்சந்தையில் விலை உயர்வை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. சமீபத்தில் 46 […]
onion new

You May Like