fbpx

ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுடையது: வெளியானது முதல் தகவல் அறிக்கை..! சிக்கலில் பாஜக வேட்பாளர்..!

சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3.99 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து சம்மனை வழங்கினார்.

இந்நிலையில் சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்ததாக தகவல். மேலும் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம்” கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல்.

Kathir

Next Post

'Satellite' மூலம் மொபைல் தொடர்பு!! -சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Mon Apr 15 , 2024
மொபைல் தகவல் தொடர்பு அமைப்பில், செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செயற்கைக்கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். சீனாவால் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட ‘Tiantong -1’ வரிசை செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றை எட்டியுள்ளது. இது ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள் இணைப்புக்கு வழி வகுத்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத் […]

You May Like