fbpx

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது “144 தடை” உத்தரவு..!

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் 144 தடை உத்தரவு என்பது தேர்தல் நாட்களில் வழக்கமாக அமல்படுத்தப்படும். இந்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டால் கூட்டம் கூட கூடாது, 5 பேருக்கு மேல் யாரும் கூடி நிற்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரியில் அமலுக்கு வந்துள்ளது. இது ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 6மணி வரை அமலில் இருக்கும்.

அந்த வகையில் கடந்த 25 நாட்களாக நடந்த அரசியல் கட்சிகளின் பரப்புரை தற்போது முடிவடைந்துள்ளது. இதற்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் வலைதளம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் எந்தவித பிரச்சாரமும் மேற்கொள்ளக்கூடாது”. வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் கல்யாண மண்டபம், தங்கும் மற்றும் விருந்தினர் விடுதிகள் உள்ளிட்டவற்றில் வெளியூர் ஆட்கள் இருக்கிறார்கள் என சோதனைகளும் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் தங்கள் உபயோகத்திற்காக ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம். அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது என பல்வேறு நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

Kathir

Next Post

Fact Check: "பாஜக தலைவரை திமுகவினர் தாக்கும் வீடியோ உண்மைக்கு புறம்பானது"… ஃபேக்ட் செக்கில் வெளியான உண்மை.!!

Wed Apr 17 , 2024
Fact Check: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் உறுப்பினரை திமுகவினர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அந்த வீடியோவை ஃபேக்ட் செக் செய்து பார்த்ததில் 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட உட் கட்சி மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது திமுகவினர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் பரப்பியது அம்பலமாகி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவிற்காக தமிழ்நாடு […]

You May Like