fbpx

கள்ளக்குறிச்சி விவகாரம்..! கனியாமூர் தேர்வு மையம் மாற்றம்..! டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்காக கனியாமூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதில், 1,200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி, தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பள்ளியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வன்முறை நிகழ்ந்ததை அடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்சனையால் தேர்வு நடத்தும் சூழல் இல்லாததால் கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில், புதிய தேர்வு மையமாக நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளி, ஏ.கே.டி. நினைவு வித்யாசாகத் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்வுக்கு நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வரும் 21-ம் தேதி வரை கனமழை கொட்டி தீர்க்கும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

Tue Jul 19 , 2022
வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர், நாமக்கல்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ […]

You May Like