fbpx

கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுறீங்களா..? இரட்டை குழந்தைகள் திடீர் மரணம்..!! தாய்க்கு தீவிர சிகிச்சை..!!

மாண்டியாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோடைகாலம் வந்து விட்டாலே குளிர்தரும் பொருட்களின் விற்பனை இரட்டிப்பாக்கி விடும். இளநீர், தர்பூசணி, சர்பத் என இதம் தரும் பானங்கள் கோடை வெயிலை மறக்கச் செய்யும். இன்னும் சிலர் ஐஸ் கிரீமை விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படி, ஐஸ் கிரீமை விரும்பிச் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தான், மாண்டியா மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை ஐஸ்கிரீம் விற்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் ஐஸ் கிரீம் வாங்கியுள்ளனர். ஐஸ் கிரீம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே 3 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர், இரட்டைக் குழந்தைகளான பூஜா, பிரசன்னா ஆகியோர் வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது தாய் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது தாய் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஐஸ் கிரீம் விற்க வந்த நபரை தேடி வருகின்றனர். ஐஸ் கிரீம் சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தமிழக அரசியலில் பரபரப்பு..!! நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா..? அதிர்ச்சி அறிக்கை..!!

Chella

Next Post

மக்களே உஷார்..!! கொளுத்தும் கோடை வெயில்..!! அடுத்த 2 நாட்களுக்கு உஷாரா இருங்க..!!

Thu Apr 18 , 2024
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரையில் உயரக்கூடும் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் […]

You May Like