தமிழக அரசியலில் பரபரப்பு..!! நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா..? அதிர்ச்சி அறிக்கை..!!

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான், இம்முறை சுயேட்சை வேட்பாளராக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் பிரச்சாரத்தின்போது, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அலிகான், தனது உடல்நலக்குறைவுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”நேற்று குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பி ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி பழப்பானம் கொடுத்தார்கள். அதன் பிறகு மோர் கொடுத்தார்கள். குடித்த அடுத்த நொடியே விழ இருந்தேன். மயக்கம் ஏற்பட்டது. அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன். வைத்தியசாலையில் சிகிச்சைகள் நடத்தப்பட்டன. அப்போதும் வலி நிற்கவில்லை. இதையடுத்து, சென்னையில் உள்ள K.M. நர்ஸிங் ஹோம்க்கு சென்றேன். அதன் பிறகு வலி குறைந்தது. விஷ முறிவு, நுரையீரல் வலி போக சிகிச்சை கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணியளவில் சாதாரண அறைக்கு மாற்றுவார்கள் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தார்கள்” என கூறினார். இந்த செய்தியானது தற்போது திரையுலகினர், அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’எதுக்கு வீடியோ எடுக்குறீங்க’..? டென்ஷன் ஆன நடிகை கனகா..!! தற்போதைய நிலையை பாருங்க..!!

Chella

Next Post

சர்கார் பட பாணியில் ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்!

Thu Apr 18 , 2024
சர்கார் படத்தில் விஜய் ஒரு ஓட்டுப் போடுவதற்காக இந்தியாவுக்கு வருவது போல, ஜனநாயக கடமையாற்ற ஜப்பானில் இருந்து சேலம் வந்துள்ளார் டிசைனிங் இன்ஜினியர். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). டிசைனிங் இன்ஜினியராக பணி புரியும் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஜப்பான் நாட்டுக்கு சென்று உள்ளார். வரை 21 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் போதிலும் அவர் ஜப்பான் குடியுரிமை பெறாமலேயே இருந்து […]

You May Like