‘The Greatest of All Time’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும் நிலையில், இன்று தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சென்னை வந்தடைந்தார்.
லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் துபாயில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடிகர் விஜய் வாக்களிக்க வர முடியாத சூழல் எழுந்த நிலையில், தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். படப்பிடிப்பிற்கு ரஷ்யா சென்ற அவர், சென்னைக்கு திரும்பும் வழியில் துபாயில் பெருமழை பெய்ததால், அங்கு சிக்கிக் கொண்டார். இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தங்கியிருந்த அவர், ஒருவழியாக விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் அவர் வாக்களிக்க உள்ளார்.
Read More : இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள சூப்பர் ஹிட் படங்கள்..!! இது செம த்ரில்லர் படம்..!!