இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள சூப்பர் ஹிட் படங்கள்..!! இது செம த்ரில்லர் படம்..!!

ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகும் திரைப்படங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சைரன்

நடிகர் ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகும். ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது சைரன் 108 திரைப்படம் ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTTயில் வெளியாகியுள்ளது.

ரணம்

ரணம் (அறம் தவறேல்) – இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்தில் வைபவ், தன்யா ஹோப், நந்திதா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிதைந்த சடலங்களுக்கு முகம் வரைந்துகொடுக்கும் கலைஞர் (வைபவ்) தனது காதல் மனைவியை விபத்தில் இழந்து, அந்த விபத்தால் ஏற்பட்ட காயத்தால், அடிக்கடி தன்னையே மறக்கும் பிரச்சனையில் அவதிப்படுகிறார். தனக்கு இருக்கும் திறமையை வைத்து காவல் நிலையத்துக்கு க்ரைம் ஸ்டோரி எழுதி தருபவராகவும் இருக்கிறார். இப்படத்தை இன்று அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம்.

யாவரும் வல்லவரே

ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். ரித்விகா, அருந்ததி, ரமேஷ் திலக், நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படம் மார்ச் 15ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகியது. இதையடுத்து, இப்படத்தின் OTT அறிவிப்பு வெளியாகியது. அதாவது இப்படம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.

உப்பு புளி காரம்

வெப் சீரிஸ் பார்க்க விரும்புவோருக்கு இது பிடிக்கும். இந்த வெப் சீரிஸ் பெயர் உப்பு புளி காரம். இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஸ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரீனா, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்தள்ளனர். இந்த வெப் சீரிஸை டிஸ்னி ஹாட்ஸ்டரில் கண்டு ரசிக்கலாம்.

Read More : வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு போறீங்களா..? அப்படினா நீங்க வாக்களிக்க முடியாது..!!

Chella

Next Post

மீண்டும் பேரழிவு..!! தீவிரமடையும் பறவைக் காய்ச்சல்..!! சாதாரணமா இருக்காதீங்க..!! எச்சரிக்கும் WHO..!!

Fri Apr 19 , 2024
உலக சுகாதார நிறுவனம் H5N1 பறவைக் காய்ச்சல் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு பரவுவது குறித்த தனது கவலையை தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சல் மனித இனம் எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய கவலை என ஐ.நா சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி ஜெர்மி ஃபரார் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பரவல் பல்லாயிரக்கணக்கான கோழிகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தது. மேலும், இந்த காய்ச்சலால் […]

You May Like