குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். பரிந்துரை செய்தவரின் கையெழுத்து பிரச்சனையால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் முகேஷ் தலால் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், போட்டியின்றி மக்களவை எம்பியாக முகேஷ் தலால் தேர்வாக உள்ளார். ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
Read More : ரஜினி படத்தை ஓரம்கட்டிய கில்லி ரீ ரிலீஸ்..!! கன்னத்தில் கைவைத்த ஐஸ்வர்யா..!! இரண்டே நாளில் இத்தனை கோடியா..?