ரஜினி படத்தை ஓரம்கட்டிய கில்லி ரீ ரிலீஸ்..!! கன்னத்தில் கைவைத்த ஐஸ்வர்யா..!! இரண்டே நாளில் இத்தனை கோடியா..?

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கில்லி’. இப்படம் திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே உலக அளவில் 10.5 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் கில்லி படத்தின் வசூல் 5 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 17 முதல் 18 கோடி ரூபாய் வசூலை கில்லி படம் முதல் இரண்டு நாட்களில் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் மொய்தின் பாயாக நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் அதிகபட்சமாக 16 கோடி ரூபாய் வசூல் மட்டுமே அள்ளியதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த வசூலை இரண்டு நாட்களில் கில்லி படம் முறியடித்துள்ளது.

லால் சலாம் திரைப்படம் ரஜினிகாந்த் படமே இல்லை என்றும் மகளுக்காக அவர் நடித்துக் கொடுத்தது தான் என்றும் வேட்டையன் மற்றும் தலைவர் 171-வது படம் வெளியாகும் போது அந்த வசூலை எல்லாம் தளபதி 69-வது படம் வெளியானாலும் முறியடிக்க வாய்ப்பே இல்லை என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Read More : சொத்து வரி செலுத்திட்டீங்களா..? தாமதமானால் என்ன நடக்கும் தெரியுமா..? சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

முதல் ஆளாக போட்டியின்றி மக்களவை எம்பியாகிறார் பாஜக வேட்பாளர்..!! யார் தெரியுமா..?

Mon Apr 22 , 2024
குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். பரிந்துரை செய்தவரின் கையெழுத்து பிரச்சனையால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் முகேஷ் தலால் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், போட்டியின்றி மக்களவை எம்பியாக முகேஷ் தலால் தேர்வாக உள்ளார். ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ […]

You May Like