PPF, சுகன்யா சம்ரித்தி உள்ளிட்ட 13 போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளதால், மாத சம்பளதாரர்கள் வரித்திட்டங்கள் குறித்து தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் முன்தாகவே தெரிவிக்க வேண்டியிருக்கிறது. இதனால் நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சேமிப்புத் திட்டங்களை தொடங்க திட்டமிடுவார்கள். இதில், PPF, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம் ஆகியவை வரிச் சலுகைகள் மற்றும் நல்ல வட்டி விகிதங்களை வழங்கும் திட்டங்களில் ஒன்றாகும்.
மத்திய அரசு மார்ச் மாதத்தில் சிறிய சேமிப்புத் திட்டங்களான பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தித் திட்டம் மற்றும் பிறவற்றுக்கான வட்டி விகிதங்களை ஏப்ரல் ஜூன் காலாண்டில் மாற்றாமல் வைத்திருந்தது. அந்த வகையில் “2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், ஏப்ரல் 1 2024 முதல் தொடங்கி ஜூன் 3 2024 வரை முடிவடையும், நான்காவது காலாண்டு (ஜனவரி 1, 2024) முதல் 2023-24 மார்ச் 31 வரை வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கு பொருந்தக்கூடிய 13 சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Sl.No. | Instruments | Rate of interest | Compounding Frequency* |
01. | தபால் அலுவலக சேமிப்பு கணக்கு | 4.0 | ஆண்டுதோறும் |
02. | 1 வருட கால வைப்பு | 6.9 (வருடாந்த வட்டி ₹708 for ₹10,000/-) | காலாண்டு |
03. | 2 ஆண்டு கால வைப்பு | 7.0 (வருடாந்த வட்டி ₹719 for ₹10,000/-) | காலாண்டு |
04. | 3 ஆண்டு கால வைப்பு | 7.1 (வருடாந்த வட்டி ₹719 for ₹10,000/-) | காலாண்டு |
05. | 5 ஆண்டு கால வைப்பு | 7.5 (வருடாந்த வட்டி ₹771 for ₹10,000/-) | காலாண்டு |
06. | 5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டம் | 6.7 | காலாண்டு |
07. | மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் | 8.2 (காலாண்டு வட்டி ₹205 for ₹10,000/-) | காலாண்டு மற்றும் செலுத்தப்பட்டவை |
08. | மாதாந்திர வருமானக் கணக்கு | 7.4 (மாதாந்திர வட்டி ₹62 for ₹10,000/-) | மாதாந்திர மற்றும் செலுத்தப்பட்டவை |
09. | தேசிய சேமிப்புச் சான்றிதழ் (VIII Issue) | 7.7 (முதிர்வு மதிப்பு ₹14,490 for ₹10,000/-) | ஆண்டுதோறும் |
10. | பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் | 7.1 | ஆண்டுதோறும் |
11. | கிசான் விகாஸ் பத்ரா | 7.5 (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்) | ஆண்டுதோறும் |
12. | மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் | 7.5 (முதிர்வு மதிப்பு ₹11,602 for ₹10,000/-) | காலாண்டு |
13. | சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் | 8.2 | ஆண்டுதோறும் |
Read more: திறமைக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை! ஃபேவரைட்டிசமுக்கு தான் வாய்ப்பு-மனம் திறந்த நடிகை…